ரகசியாவின் 'பயங்கர' முடிவு!

By Staff

Ragasya
'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த' ஒரு முடிவை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்துப் பாட்டுக்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கூடவே நடிப்பதென்று.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வருகை தந்தவர் ரகசியா. 'சீனாதானா' பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம், இளம் உள்ளங்களை 'மெல்ட்' ஆக வைத்து புரட்டிப் போட்டது.

அதன் பின்னர் ரகசியா குத்தாட்டத்தில் லீடிங்கில் இருந்து வந்தார். சமீப காலமாக ரகசியாவின் மார்க்கெட் சற்றே தளர்ந்து போய் காணப்பட்டது. இந்த நிலையில் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ரகசியா.

அதாவது இனிமேல் குத்தாட்டத்தில் ஆடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. அதற்குப் பதிலாக இனிமேல் நடிப்பில் சீரியஸாக கவனம் செலுத்தப் போகிறாராம். அவரது இந்த முடிவுக்கு 'இந்திர விழா'தான் காரணம்.

சினிமாவுக்கு வந்த பின்னர் முதல் முறையாக, இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் ரகசியா. ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், இந்த வேடத்தில் நடிப்பதாக இருந்தவர் மாளவிகா. ஆனால் திடீரென அவர் கர்ப்பமடைந்ததால் விலகிக் கொண்டு விட்டார்.

இதையடுத்து சொர்ணமால்யா உள்ளிட்ட பலரை அணுகினார் ராஜேஷ்வர். ஆனால் யாரும் அவருக்கு திருப்தியாக வரவில்லை. இந்த நிலையில்தான் ரகசியாவை புக் செய்து விட்டார்.

கடந்த ஒரு வாரமாக ரகசியா நடித்த காட்சிகளைப் படமாக்கியுள்ளார் ராஜேஷ்வர். சும்மா சொல்லக் கூடாது, சிறப்பாகவே நடிக்கிறார் ரகசியா. ஒரே டேக்கில் காட்சியை முடித்து விடுகிறார், பிரமாதம் என்று பாராட்டித் தள்ளுகிறார்.

ரகசியா இப்படத்தில் ஒரு பத்திரிக்கையாளராக வருகிறார். அத்தோடு ரகசியா டைப் நடனமும் படத்தில் இடம் பெறுகிறது. அதாவது கவர்ச்சியும், நடிப்பும் கூடிய கேரக்டர் இது. இதனால்தான் மாளவிகாவை புக் செய்தார் ராஜேஷ்வர். அவர் சரிவராமல் போனதால்தான் தற்போது அந்த இடத்திற்கு ரகசியா வந்துள்ளார்.

கேரக்டரில் கிளாமர் இருந்தாலும் கூட நடிப்பதற்கு நல்ல வாய்ப்பாம். இதனால் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரகசியா. இந்திர விழா கொடுத்த ஊக்கத்தால் இனிமேல் குத்துப் பாட்டுக்களுக்கு ஆடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் அவர்.

தனது கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்தால் ஹீரோயினாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறுகிறார் ரகசியா.

ரகசியாவுக்கு முன்பு குத்தாட்டத்தில் கலக்கி வந்த முமைத்கான் தெலுங்கில் இப்போது நாயகியாகி விட்டார். விஜயசாந்தி டைப்பில் அதிரடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கூடவே கிளாமரையும் கையில் வைத்துள்ளார். அதே ரேஞ்சில் ரகசியாவும் கலக்குவாரா என்பதை போகப் போகப் பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X