மும்பை தாக்குதல் படமாகுமா?

பாலிவுட்டில் ராம் கோபால் வர்மா அல்லது கோலிவுட்டில் ஆர்.கே. செல்வமணி ஆகியோரில் ஒருவர் மும்பை சம்பவத்தை படமாக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின்போது ராம் கோபால் வர்மா சம்பவ இடங்களுக்கு வருகை தந்தார். இதுகுறித்து அப்போதே அவரிடம் கேட்கப்பட்டது. படமாக்கப் போகிறீர்களா என்று. ஆனால் அதெல்லாம் இல்லை. இதை அரசியலாக்காதீர்கள் என்று கூறினார் ராம் கோபால் வர்மா.
ஆனால் மும்பை சம்பவத்தை அவர் திரைப்படமாக்கக் கூடும் என்று பாலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது.
அதேசமயம், நம்ம ஊர் ஆர்.கே.செல்வமணியும், மும்பை சம்பவத்தை திரைப்படமாக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஏற்கனவே ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியவர் செல்வமணி. குற்றப்பத்திரிக்கை என்ற பெயரில் எடுக்கப்பட்ட அப்படம் பல வருடங்களாக திரைக்கு வர முடியாமல் தத்தளித்தது நினைவிருக்கலாம்.
இந் நிலையில், மும்பை சம்பவத்தை திரைப்படமாக்க அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











