பிரபுதேவா-நயன்: மீண்டும் பஞ்சாயத்து கூட்டும் ரம்லத்!

இதற்காக தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சென்று மீண்டும் பிரபுதேவாவுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடக்கம் என்கிறார்கள்.
நயன்தாரா காதலால் மனைவி ரம்லத்தை பிரபுதேவா உதறிவிட்டார். கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வரவில்லை. ஹைதராபாத்தில் நயன்தாராவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு தனி வீடும் தயாராகிறது இருவருக்கும்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத் குழந்தைகளுடன் தனியாக தவிக்கிறாராம்.
இந்த மாத இறுதியில் பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட ரம்லத் திட்டமிட்டுள்ளார். தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி மத்தியஸ்தர்களிடம் பேசி வருகிறார். இந்த வாரம் பிரபுதேவாவிடம் பேசுவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளராம். ஒருவேளை தன்னை பிரபுதேவா முழுக்க ஒதுக்கிவிட்டால் அவர் மீது வழக்கு தொடரலாமா என்றும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரம்லத் புகார் அளித்தால் பிரபுதேவா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த முறை பஞ்சாயத்து பலனளிக்காவிட்டால், பிரபு தேவாவுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடுக்க ரம்லத் தயாராகி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











