'வயல்': வழக்கு போடும் ராணி!

2005ம் ஆண்டு அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் 11 ஆயிரம் சதுர அடி விவசாய நிலத்தை வாங்கினார் ராணி முகர்ஜி. ஆனால் இந்த நிலத்தை விவசாயி ஒருவருக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டிருந்தது. எனவே இந்த நிலத்தை யாரும் வாங்க முடியாது. இதை அறியாமல் ராணி முகர்ஜி நிலத்தை வாங்கி ஏமாந்து விட்டார்.
இந்த நிலத்தை ரூ. 33 லட்சத்திற்கு வாங்கி, அதை ரூ. 1.32 லட்சத்திற்கு பதிவு செய்திருந்தார் ராணி. எனவே நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
மேலும், ராணி முகர்ஜி வாங்கிய நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ராணி முகர்ஜி முடிவு செய்துள்ளார். இதை அவரே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications