போலந்து திரைப்பட விழா விருதுக்கு ரவி கே சந்திரன் பெயர் பரிந்துரை!
பிரபலமான போலந்து திரைப்பட விழா விருதுக்கு இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.
ஷாரூக்கான் நடித்த மை நேம் ஈஸ் கான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக இந்த கவுரவம் அவருக்குக் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஒளிப்பதிவில் முத்திரை பதித்தவர் ரவி கே சந்திரன்.
இந்தியாவின் டாப் இயக்குநர்கள் ஷங்கர், மணி ரத்னம், கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா, ஏ ஆர் முருகதாஸ் என பலரிடமும் பணியாற்றி பாராட்டுக்களைப் பெற்றவர் சந்திரன்.
மை நேம் ஈஸ் கான் படத்தில் மிகச் சிறந்த ஒளிப்பதிவுக்காக போலந்தின் PLUS CAMERIMAGE திரைப்பட விருது விழாவில் ரவி கே சந்திரன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த விழா கருதப்படுகிறது. சர்வதேச அளவில் வேறு ஒளிப்பதிவாளர்களும் இந்த போட்டியில் உள்ளனர். நவம்பர் 27 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இறுதி நாளன்று விருது வென்றோர் விபரம் வெளி்யாகும்.


Click it and Unblock the Notifications











