For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி!-சரத்குமார் அறிவிப்பு

    By Chakra
    |

    Sarath Kumar
    நடிகர் நடிகைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

    இதற்காக நடிகர் சங்கம் சார்பில் கிரிக்கெட் கிளப் துவக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் சரத்குமார், ராதாரவி பங்கேற்ற நடிகர் சங்க செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    பிற மாநிலங்களில் நடிகர், நடிகைகள் கிரிக்கெட் கிளப் வைத்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுபோல் தமிழ் நடிகர்களும் தற்போது கிரிக்கெட் கிளப் துவக்குகிறார்கள்.

    நடிகர் சங்க கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராகும் நடிகர், நடிகைகளுக்கு பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர் விளம்பரதாரர்கள் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்று ஆடுவார்கள். தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்களுடன் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்பார்கள்.

    நடிகர் சங்க கிரிக்கெட் கிளப்பை சென்னை கிரிக்கெட் கிளப்பில் பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் மற்ற மாநில மொழி நடிகர்களுடன் இணைந்து தனி கிரிக்கெட் போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X