எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் சத்யம் சினிமாஸின் 8 சினிப்ளக்ஸ்கள்

இவற்றை வரும் ஜனவரி மாதம் திறக்க உள்ளதாக சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி டேன் நகரோன்கா, சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஆறு மாடிகளுடன் 10 லட்சம் சதுரடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த வளாகத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில், எட்டு சினிப்ளக்ஸ் தியேட்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், இரண்டு பெரிய தியேட்டர்களும், ஆறு சிறிய தியேட்டர்களும் ஏழரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக எக்ஸ்பிரஸ் அவென்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவை, 2010-ம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ளன என்றார்.
Comments
எக்ஸ்பிரஸ் அவென்யூ சத்யம் சினிப்ளக்ஸ் சினிமா தமிழ் திரையரங்குகள் cinema express avenue satyam cinemas theaters


Click it and Unblock the Notifications