என் படத்தை நானே பார்க்க மாட்டேன்!-சத்யராஜ்

By Staff

Satyaraj and Kiran
தனி கதாநாயகனாக நடித்தால் என் படத்தை நானே பார்க்க மாட்டேன் என்றார் நடிகர் சத்யராஜ்.

சத்யராஜ், சுந்தர் சி. இணைந்து நடித்துள்ள ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

"என்னை மாதிரி நடிகர்களுக்கு, ஒரு துணை தேவைப்படுகிறது. தனி கதாநாயகனாக நடித்தால், என் படத்தை நானே பார்க்க மாட்டேன். அதனால்தான் இந்த படத்தில் சுந்தர் சி.யுடன் நடித்தேன். இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இனி இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்தான் ஜெயிக்கும்.

எப்போதுமே நல்ல கதை இருந்தால், அந்த படம் ஜெயிக்கும். குறிப்பாக, பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து படம் எடுத்தால் ஜெயிக்கலாம். இதற்கு உதாரணமாக சில படங்களை கூறலாம்.

பராசக்தி படத்தில் சிவாஜி சார்தான் கதாநாயகன் என்றாலும், ரஞ்சனின் பிரச்சினையை மையமாக வைத்து அந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. நாடோடி மன்னன் படத்தை எடுத்துக்கொண்டால், காணாமல் போன ரத்னபுரி இளவரசியை அடிப்படையாக வைத்து கதை அமைக்கப்பட்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில், பண்டரிபாயை மையமாக வைத்து கதை அமைந்திருந்தது. தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடிய சந்திரமுகி படத்தை எடுத்துக்கொண்டால், ஜோதிகா கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருந்தது.." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X