சென்னையில் பகுத்தறிவு குறும்படத் திருவிழா-அனுமதி இலவசம்
மதுரை: சென்னையில் உள்ள பெரியார் திடலில் இன்று பகுத்தறிவு குறும்படத் திருவிழா நடைபெறுகின்றது.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெரும் இந்த திருவிழா, சென்னை பெரியார் திடலில் நடைபெறுகின்றது.
விழாவில் தி.க.தலைவர் கி.வீரமணி, இயக்குநர் சீனு ராமசாமி, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் பொன் சுதா, குறும்பட ஆவணப்பட இயக்குநர்கள், ஊடகத் துறையினர் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவிற்கு அனுமதி இலவசம்.
இது குறித்து விவரம் அறிய 9444210999, 9940489230, 9944039940 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











