'பலான' சிந்துசமவெளி கதை!
மாமனாரின் இன்பவெறி என்ற ரீதியில் ஒரு காலத்தில் பலான படங்கள் மலையாளத்தில் நிறைய வெளியாகின. இப்போது அதே டைப் கதையை சற்று நாகரீக முலாம் பூசி கொடுக்கிறார் இயக்குநர் சாமி சிந்து சமவெளி படத்தில்.
இந்தப் படத்தின் நாயகி அனகா. வழக்கம் போல கேரளத்து வரவுதான். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஹரீஸ் கல்யாணம். மருமகள் அனகா மீது அவரது மாமனார் கொள்ளும் காதல் பிளஸ் காமக் கதையைத்தான் சிந்துசமவெளியில் காட்டியிருக்கிறாராம் சாமி.
ஏற்கனவே இவர் எடுத்த உயிர் படத்தில் கொழுந்தனார் மீது காமம் கொள்ளும் அண்ணி கதையைக் காட்டி பெரும் சர்ச்சையை உருவாக்கினார். பின்னர் மிருகம் படத்திலும் முரட்டுத்தனமான காமத்தையே கதையாகக் கொடுத்தார்.
இப்போது மாமனார், மருமகள் காதலைச் சொல்லியுள்ளாராம். தியேட்டருக்குப் படம் வந்த பிறகு பெரும் பெரும் போராட்டங்கள் காத்திருக்கின்றன என்பதை சென்சார் அதிகாரிகளின் கறாரான கட்டிங்கே கட்டியம் கூறியுள்ளது.
படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தபோது கதையைப் பார்த்து அரண்டு விட்டனர் சென்சார் அதிகாரிகள். இருந்தாலும் இது ஒரு நல்ல விழிப்புணர்வுப் படமாக இருக்கும் என்று கூறிய அவர்கள், வரும் இரண்டு காட்சிகள், மூன்று வசனங்களைத் தூக்குமாறு கூறி விட்டனர். இதையடுத்து அவற்றை வெட்டி விட்டார் சாமி.
தற்போது ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம். இதையடுத்து விரைவில் சிந்து சமவெளி தமிழ் கூறும் நல்லுலக ரசிகர்களின் பார்வைக்கு திறந்து விடப்படவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











