தமிழில் டப் ஆகும் சிங்களப் படம்

Malani Fonseka
ஆகாச குசும் என்ற பெயரில் சிங்களத்தில் உருவாக்கப்பட்ட படம் தமிழில் ஆகாயப் பூக்கள் என்ற பெயரில் டப் செய்யப்படவுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகர் பிரசாத்தும், இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் வித்தநாகேவும் இணைந்து உருவாக்கிய படம் ஆகாச குசும். இப்படம் இலங்கையிலிருந்து ஆஸ்கர் விருதுப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு போயுள்ளது.

இப்படத்தை இலங்கையுடன் இணைந்து தயாரித்த ஸ்ரீகர் பிரசாத் பிரபல எடிட்டர் ஆவார். தற்போது இப்படத்தை தமிழில் டப் செய்ய ஸ்ரீகர் பிரசாத் ஆர்வம் காட்டுகிறாராம்.

விரைவில் இப்படம் ஆகாயப் பூக்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சென்னையில் திரையிடப்படவுள்ளதாம். அனேகமாக சத்யம் சினிமாஸ் அரங்கில் இது திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து வித்தநாகே கூறுகையில், பொங்கல் பண்டிகையின்போது இப்படத்தை சத்யம் சினிமாவில் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

ஸ்ரீகர் பிரசாத் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் தமிழில் டப் செய்யும் யோசனை வந்தது. இதற்காக நான் சென்னைக்கு நவம்பர் 7ம் தேதி வருகிறேன். டப்பிங் குறித்து ஸ்ரீகர் பிரசாத், ஒலிப்பதிவாளர் லட்சுமிநாராயணன் ஆகியோருடன் ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.

இலங்கையின் பிரபல நடிகை சந்தியா ராணியின் கடந்த கால வரலாறு குறித்த கதை இது. சந்தியா ராணியாக நடித்திருப்பவர் இலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவரான மாலினி பொன்சேகா. இவர் தவிர நிம்மி ஹர்சகாமா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X