லாரன்ஸ் இல்லத்துக்கு சவுந்தர்யா உதவி

அவரது சேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட ரஜினி, ராகவா லாரன்ஸை அழைத்து அந்த இல்லத்தில் இருப்பவர்களின் சாப்பாட்டுச் செலவுக்காக மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகக் கூறினார். சொன்னதோடு நில்லாமல் மாதம் தோறும் முதல் தேதியன்று அந்தத் தொகை தவறாமல் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் இளையமகளும் ஆக்கர் ஸ்டுடியோ நிர்வாக இயக்குநருமான சவுந்தர்யாவும் தன் பங்குக்கு லாரன்ஸின் அனாதை இல்லத்துக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி முதல் மாதத்துக்கான தொகையை லாரன்ஸிடம் வழங்கினார். தொடர்ந்து இனி மாதந்தோறும் இந்தத் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் சவுந்தர்யா.
Comments


Click it and Unblock the Notifications