கலாம், அமீருக்கு 'வண்ணத்துப் பூச்சி'

கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளரான அழகப்பன், வண்ணத்துப் பூச்சி என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். தலைமுறை இடைவெளி குறித்த படம் இது.
இப்படத்தில் ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாலாசிங் தாத்தா வேடம் பூண்டுள்ளார். ஸ்ரீலட்சுமி என்கிற 9 வயது சிறுமி கதையின் நாயகியாக நடித்துள்ளார். பழனிபாரதி பாடல்களை புனைந்துள்ளார். ரேஹான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும், அமீர் கானுக்கும் பிரத்யேகமாக திரையிட்டுக் காட்ட இயக்குநர் அழகப்பன் தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர் கலாம். அதேபோல தாரே ஜமீன் பர் என்கிற அருமையான படத்தை உருவாக்கியவர் அமீர் கான். அவர்கள் இருவரும் இப்படத்தைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன். எனவே அவர்களுக்கு இப்படத்தைப் போட்டுக் காட்ட முடிவு செய்தேன் என்றார்.
வண்ணத்துப் பூச்சி, வசீகரமாக பறக்கட்டும்!


Click it and Unblock the Notifications











