தமிழுக்கு வரும் சீனிவாசன்!

By Staff

Meena with Srinivasan
மலையாளத்தின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என பல சிறப்புத் தகுதிகள் இருந்தாலும், சீனிவாசனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெகுவாகத் தெரியாது.

இவரது பெயர் ஓரளவுக்கு தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தது குசேலன் மூலமாகத்தான். இந்தப் படத்தின் மூலக் கதை சீனிவாசன் எழுதியது.

இப்போது மலையாளத்தில் மிகமிக பிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், சீனிவாசனுக்கு தமிழ் மீதும் ஒரு கண் எப்போதும் உண்டு.

அவரது இந்த நீண்ட நாள் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யப் போகிறார் புதிய இயக்குநர் தாமிரா.

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸூக்காக தான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் ரெட்டைச் சுழி படத்தில் சீனிவாசன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அதேபோல, சில தமிழ் படத் தயாரிப்பாளர்கள் தங்களின் அடுத்த படங்களுக்கான கதை, திரைக்கதை அமைத்துத் தருமாறு சீனிவாசனை அழைத்தபடி உள்ளார்களாம்.

ஆனால் இப்போதைக்கு எதையும் உடனடியாக ஒப்புக் கொள்ளவில்லை சீனிவாசன். தன்னுடைய வலுவான கோட்டையை விட்டு வெளியில் வருவது சரிதானா... என தன் நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சீனிவாசன்.

நல்லா யோசியுங்க..!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X