விளம்பரப் படங்களில் நடிப்பார் ஜோதிகா!

By Staff

Jyothika with Surya
"என் மனைவி ஜோவுக்கு இப்போது திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் இல்லை. மிகவும் அவசியம் என்றால் மட்டும் விளம்பரப் படங்களில் நடிப்பார். அதுகூட என்னுடன் மட்டும்தான்" என்கிறார் நடிகர் சூர்யா.

சூர்யாவின் அயன் படம் நாளை வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக ஓடும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை சூர்யாவுக்கு.

அது என்ன அத்தனை நம்பிக்கை?

"காரணம் இருக்கு... இந்தப் படத்தில் இதுவரை யாரும் சொல்லத் துணியாத ஒரு புதிய விஷயம் சொல்ல்யிருக்கோம். படத்தில் பார்க்கும்போது ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அந்த சஸ்பென்ஸைத் தரவே இத்தனை ரகசியம்" என்கிறார் சூர்யா.

ஜோதிகாவுக்கு இப்போதும் நடிக்க வாய்ப்பு வருவதாகச் சொல்கிறார்களே... அது பற்றி? என்றதும், இப்படிக் கூறினார்:

"உண்மைதான். நிறைய படங்களில் அவரை நடிக்க அழைக்கிறார்கள். ஆனால் ஜோவுக்கு அதில் இஷ்டமில்லை. குழந்தை, வீடு என்று அவருக்கு நிறையப் பொறுப்புகள் இப்போது. தேவைப்பட்டால் நாங்கள் இருவரும் சேர்ந்து விளம்பர படங்களில் நடிப்போம். அது கூட நான் வற்புறுத்தினால் தான் நடக்கும். காரணம் ஜோதிகா நடித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இல்லையே"..., என்கிறார்.

அடுத்து ஆதவன், சிங்கம் என இரண்டு படங்களில் நடிக்கிறார் சூர்யா. படம் வெளிவரும் முன்பே சமீபத்தில் பரபரப்பு கிளப்பியுள்ள பசங்க படம் மாதிரி ஒரு படம் பண்ண ஆசையாம் சூர்யாவுக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X