Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'தா'... தமிழ் சினிமாவின் தரமுயர்த்தும் புதிய முயற்சி!
படத்தின் க்ளைமாக்ஸ் முடிவில், பத்திரிகையாளர்கள் தங்களையும் அறியாமல் கைதட்டிப் பாராட்டினர்.
தமிழில் உண்மையிலேயே வித்தியாசமான, அதேநேரம் பொழுதுபோக்கும் நிறைந்தபடம் என்ற பெருமை தா படத்துக்கு உண்டு.
ஒரு இயக்குநரின் ஆளுமையை படம் முழுக்க உணர முடிந்தது.
சுமாரான படத்துக்குக் கூட தொலைக்காட்சி விளம்பரங்கள் தூள் பறக்க, இந்த சூப்பர் படம் சந்தடியில்லாமல் வருகிறதே என்று படத்தின் இயக்குநரான ஆர்கே சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.
"நிச்சயம் பெரிய லெவல்ல பண்ணனும் சார். படம் பார்த்த பத்திரிகைக்காரங்க ஒருமனதா பாராட்டியிருப்பது நம்பிக்கையா இருக்கு" என்றார்.
சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்த சூர்ய பிரகாஷுக்கு இது முதல்படம். படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி இதற்கு முன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம். கதை மீதிருந்த நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு 'தா' ஹீரோவாகியிருக்கிறார்.
நாயகியாக புதுமுகம் நிஷா அறிமுகமாகிறார். இசையமைப்பாளரும் ஒரு புதுமுகம்தான். பெயர் ஸ்ரீவிஜய்.
ராஜேஷ் உத்தமன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை முதல் திரைக்கு வருகிறது.