வசந்தபாலனின் ஆங்கிலப் படம்

பாண்டிட் குயின் படத்தைத் தயாரித்த சந்தீப் சிங் பேடி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரஃப் இந்தியா (Rough India) எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
அங்காடித் தெரு படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டசம்பரில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் வசந்த பாலன் இயக்கி தேசிய விருது பெற்ற வெயில் படத்தைப் பார்த்த பாண்டிட் குயின் தயாரிப்பாளர்கள், மீண்டும் தாங்கள் எடுக்கும் சரித்திரப் படத்துக்கு தகுந்த இயக்குநர் வசந்த பாலன்தான் என முடிவு செய்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வசந்தபாலனிடம் பேசினோம்.
இப்போதைக்கு அங்காடித் தெருவில்தான் என் கவனமெல்லாம். ஆங்கிலப் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் முடிவாக எதையும் இப்போது கூற முடியாது. அங்காடித் தெரு முடிந்ததும் மற்றவற்றைச் சொல்கிறேன், என்றார்.
எப்படியோ, ஒரு தமிழர் ஆங்கிலப் படம் இயக்குவது பெருமைதானே!


Click it and Unblock the Notifications











