கமிஷன் தரவில்லை - விஜய டி.ராஜேந்தர், சிம்பு மீது வழக்கு

லட்சிய திமுக மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் பரமன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை விஜய. டி.ராஜேந்தருக்கு வாங்கிக் கொடுத்தேன். இதற்காக அவர் எனக்கு கமிஷன் தொகையாக ரூ.12 லட்சம் தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் பணத்தை சொன்னபடி தரவில்லை.
பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது விஜய.டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, உறவினர் வசந்தி ஆகியோர் பணம் தர மறுத்தனர். மேலும், அவரது மகனும், நடிகருமான சிம்பு என்னை மிரட்டினார்.
இது குறித்து மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனு ஏற்கனவே ஒரு முறை தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











