'வால்மீகி'யால் பிரச்சினை!

சிவா மனசுல சக்தி என்ற படத்தைத் தயாரித்து வரும் விகடன் டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக வால்மீகி என்ற படத்தை அறிவித்துள்ளது.
கேரளத்துக் கிளி மீரா நந்தன்தான் இப்படத்தின் நாயகி. அங்கு முல்லா படத்தில் நடித்து அறிமுகமானவர் மீரா நந்தன். புளியைப் போட்டு துடைத்து வைத்த குத்து விளக்கு போல அம்சமாக இருக்கிறார் மீரா நந்தன்.
தனது முதல் தமிழ்ப் படத்திலேயே ஆசின், நயனதாரா ரேஞ்சுக்கு உயர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறாராம் மீரா.
இப்போது பிரச்சினைக்கு வருவோம். படத்தின் பெயரான வால்மீகி தமிழ்ப் பெயர் இல்லை, சமஸ்கிருதப் பெயர் என்று சிலர் விகடன் டாக்கீஸ் நிறுவனத்தினரை அலர்ட் செய்துள்ளனர்.
இப்படிப் பெயர் வைத்தால் அரசின் கேளிக்கை வரிச் சலுகை கிடைக்காது என்று அவர்கள் காதில் ஓத, எதற்கு வம்பு என்று யோசித்த விகடன் டாக்கீஸ் நிறுவனம் நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











