twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெஸ்டர்ன் டான்ஸ் மோகம் மறையும் - மிதுன்

    By Staff
    |

    Mithun Chakraborty
    பாலிவுட்டை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வெஸ்டர்ன் டான்ஸ் மோகம் பலவீனமடைந்து நாளடைவில் மறைந்து போய் விடும் என்று கூறியுள்ளார் இந்தியாவின் 'ஒரிஜினல் டிஸ்கோ டான்ஸர்' மிதுன் சக்ரவர்த்தி.

    இந்தியாவில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் மிதுன். அவரது டிஸ்கோ டான்ஸுக்கு அன்று ஏகப்பட்ட ரசிகர்கள். மிதுன் நடிப்பில் வெளியான டிஸ்கோ டான்ஸர், டான்ஸ் டான்ஸ் படங்களுக்கு இன்றும் பாலிவுட்டில் செம மவுசு உள்ளது. இவரைப் பின்பற்றித்தான் கோலிவுட்டில் ஆனந்த்பாபு பிரபலமடைந்தார்.

    இந்த நிலையில் தற்போது பாலிவுட்டை ஆட்டிப்படைத்து வரும் மேற்கத்திய நடன மோகம் விரைவில் காணாமல் போய் விடும் என்று கூறியுள்ளார் மிதுன்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டை இப்போது மேற்கத்திய நடன மோகம் பீடித்துள்ளது. ஆனால் இது நீண்ட நாட்கள் நீடிக்காது. காரணம், அதிக அளவிலான மக்களை இந்த நடனங்கள் கவரவில்லை. எனவே விரைவிலேயே இது காணாமல் போய் விடும். இன்று யாரைப் பார்த்தாலும் வெஸ்டர்ன் டான்ஸ்தான் ஆடுகின்றனர்.

    இந்தியா என்பது, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை என்று நான்கு பெருநகரங்களுடன் முடிந்து விடுவது அல்ல. இந்தியாவின் நடனம் வேறு, கலாச்சாரம் வேறு. இந்த நான்கு நகரங்களில் வேண்டுமானால் வெஸ்டர்ன் டான்ஸுக்கு மோகம் இருக்கலாம். ஆனால் இவற்றைத் தாண்டிப் பிற பகுதிகளுக்குப் போனால் அங்கு இத்தகைய நடனங்களை யாருமே ரசிப்பதில்லை என்று தெரிய வரும் என்று கூறியுள்ளார் மிதுன்.

    பாலிவுட்டில் இப்போது நடனம் ஆடுகிறவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ரித்திக் ரோஷன்தானாம். அபாரமாக ஆடுகிறார் ரோஷன் என்று புகழாம் சூடுகிறார் இந்த 'சூப்பர்' டான்ஸர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X