'மோகினியி'ல் யாமினி!

By Staff

Yamini Sharma
ஜெகன்மோகினி ரீமேக்கில் நமீதாவுடன் இப்போது இன்னொரு 'குலுக்கல் திலகமும்' உடன் சேர்ந்துள்ளது. அது 'அழகப்பன்' புகழ் தீர்த்தா சர்மா என்ற யாமினி சர்மா.

அந்தக் காலத்தில் வெளியாகி இந்தக் காலம் வரை ரசித்துப் பார்க்கப்படும் படம் ஜெகன் மோகனி. எந்தவித டெக்னாலஜியும் இல்லாத அக்காலத்திலேயே ஏகப்பட்ட தந்திரக் காட்சிகளுடன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ஜெகன்மோகினி.

கவர்ச்சி தலைமையகம் ஜெயமாலினிதான் இப்படத்தின் நாயகி. அவரது கவர்ச்சியும், மோகினிப் பேயின் கோர விளையாட்டும் இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்தன.

இப்படத்தை விட்டலாச்சார்யாவின் மகன் மீண்டும் ரீமேக் செய்கிறார். ஜெயமாலினி நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கவுள்ளார். ஜெயமாலினிக்கு இணையான கவர்ச்சியும், உடல் வாகும் நமீதாவிடம் மட்டுமே உள்ளது என்பதால்தான் நமீதாவை பிடித்துப் போட்டுள்ளனர். நமீதாவும் ஜெகன்மோகினியை சிடியில் போட்டுப் பார்த்து ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் படத்தில் இன்னொரு குலுக்கல் திலகமும் இடம் பெறுகிறார். அவர் யாமினி சர்மா.

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தவர்தான் யாமினி. படு தினுசாக, ஒரு திமிசாக இருக்கும் யாமினி, அழகப்பனில் கிளாமரில் கரைபுரண்டோடியிருந்தார்.

இப்போது நமீதாவுடன் இணைந்து ஜெகன்மோகினி ரீமேக்கில் ரசிகர்களை அலைய விட வருகிறார்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X