உலகக் கோப்பை கிரிக்கெட்டால் வசூலுக்கு ஆபத்து-3 வாரத்தில் திரைக்கு வரும் 15 படங்கள்
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளதாலும், அது முடிந்தவுடன் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதாலும், வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் அடுத்தடுத்து இரு வாரங்களில் 15 திரைப்படங்களை தியேட்டர்களுக்குக் கொண்டு வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நினைத்த நேரத்திற்குப் படத்தைத் திரையிட முடிவதில்லை. முன்பெல்லாம் படத்தைத் தயாரித்ததும், திரையிடுவார்கள். இப்போது நாலையும் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
பெரிய நடிகர்கள் படம் வருகிறதா, அந்த சமயத்தில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்று பலவற்றையும் பார்த்துதான் படத்தை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் இப்போது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியும், ஐபிஎல் தொடரும் அடுத்தடுத்து வரவுள்ளதால் தயாரித்து முடிவடைந்துள்ள படங்களை அடுத்தடுத்து 3 வாரங்களுக்குள் ரிலீஸ் செய்யவுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அடுத்த 3 வாரங்களில் 15 படங்களை திரையிடப் போகிறார்களாம். அதில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது யுத்தம் செய், தூங்கா நகரம், கோ, பயணம், சிங்கம்புலி, காதலர் குடியிருப்பு, நடுநிசி நாய்கள், நந்தி ஆகியவை.
நாளை யுத்தம் செய், தூங்காநகரம், மின்சாரக் காதலி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. நரேன் நடித்துள்ள தம்பிக்கோட்டை 10ம் தேதியும், பயணம் 11ம் தேதியும் வருகின்றன.
ஜீவா நடித்து இரு படங்கள் திரைக்கு வருகின்றன. ஒரு படமான சிங்கம்புலி 11ம் தேதியும், இன்னொரு படமான கோ, 25ம் தேதியும் திரைக்கு வருகின்றன.
காதலர் குடியிருப்பு, நந்தி, ஐவர், வர்மம் ஆகியவை 11ம் தேதியே வருகின்றன.
கெளதம் மேனனின் நடுநிசி நாய்கள், மின்சாரம், ஆரண்ய காண்டம் ஆகியவை 18ம் தேதி திரைக்கு வருகின்றனவாம். கோ மற்றும் ஆயிரம் விளக்கு ஆகியவை 25ம் தேதி ரிலீஸாகின்றன.
2 வார இடைவெளியில், இப்படி 15 படங்கள் வெளியாவதால் திரையுலகில் சற்று கவலை ரேகையும் படர்ந்துள்ளதைக் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications











