ஏமாற்றப்படும் தமிழினம்!-சேரன் கொதிப்பு

கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் கே.எஸ்.ராஜன், ஆல் ஷோலா புரொடக்ஷன்ஸ் என்ற தனது பட நிறுவனம் மூலம் முதன்முதலாக தமிழ் படம் தயாரிக்கிறார்.
ஆறுமனமே என்ற அந்தப்படத்தில் அவரது மகனே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நிக்கோல் நடிக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை போர் பிரேம்ஸ் தியேட்டரில் நடந்தது. பாடல்களை இயக்குநர் அமீர் வெளியிட, இயக்குநரும் நடிகருமான சேரன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் சேரன் பேசியதாவது:
நடிகர் ஸ்ரீமன் இங்கே பேசும்போது, வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு. வந்தவர்களை எல்லாம் வாழவைக்கும். நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், என்றார். அது முழுக்க முழுக்க உண்மைதான். தமிழ்நாடு, வந்தவர்களை எல்லாம் நல்லபடியாக வாழவைக்கும்.
ஆனால் அந்தத் தமிழன் எங்குபோனாலும் ஏமாற்றப்படுகிறான். இங்குதான் என்றில்லை... இலங்கையிலும், பிறநாடுகளிலும்.
தமிழக மக்கள் எப்போதும் நன்றி மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.மற்றவர்களை வாழவைக்கும் நாங்கள், பிற மாநிலங்களிடமும் அதை எதிர்பார்க்கிறோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது, என்றார்.
நடிகர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், கஞ்சா கருப்பு, தீபக், நடிகை நிக்கோல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் அன்புமணி ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.


Click it and Unblock the Notifications











