twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஷ்ணு - இயக்குநர் கே நட்ராஜ் மகள் திருமணம்: ரஜினி வாழ்த்து

    By Chakra
    |

    Rajini at Actor Vishnu Marriage
    ரஜினியின் நண்பரும் இயக்குநருமான நடராஜின் மகள் ரஜினிக்கும் வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது.

    ரஜினி நேரில் போய் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி போன்ற படங்களை இயக்கியவர் கே நட்ராஜ். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்.

    தங்களின் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டும் வகையில், தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டினார் நட்ராஜ்.

    வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோவும், பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனுமான விஷ்ணுவுக்கும் ரஜினிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களின் திருமணம் நேற்று பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

    டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட ஏராளமான உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X