புத்தாண்டு: கோவை பண்ணை வீடுகளில் நடிகைகளின் குஜால் பார்ட்டி!

By Sudha

புத்தாண்டு வந்தாலே நடிகைகள் படு பிஸியாகிவிடுவார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட இடங்களிலிருந்து அழைப்புகள் குவியும், நள்ளிரவு பார்ட்டிகளுக்கு.

முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு பறந்து போய்க் கொண்டிருந்த நடிகைகளுக்கு இப்போது உள்ளூரிலேயே கிராக்கி அதிகமாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் பொழுதுபோக்கு கிளப்புகளில் பெரும் தொழிலதிபர்கள் அல்லது பணக்கார இளைஞர்கள் பார்ட்டி வைப்பார்கள். அதில் சில நடிகைகள் பங்கேற்று நடனமாடி, விருந்து பரிமாறுவார்கள்.

ஆனால் இந்த பார்ட்டிகள் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், அடிக்கடி போலீஸ் ரெய்டு நடப்பதாலும், புத்தாண்டு பார்ட்டிகள் சென்னைப் பகுதிகளில் அடக்கி வாசிக்கப்படுகின்றன.

ஆனால் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெகு ஜோராக நடந்து வருகின்றன இந்த போதை மற்றும் கவர்ச்சிப் பார்ட்டிகள். இங்குள்ள பெரிய பண்ணை வீடுகளில் பிரபல நடிகைகள் வந்து ஆட்டம் போடுகின்றனர். மதுவும் போதை வஸ்துகளும் தாராளமாக இந்த பண்ணை வீடுகளில் புழங்குகின்றன. சிறிய - பெரிய என்ற பேதமின்றி அனைத்து தொவிலதிபர்களும் அங்குதான் குவிகின்றனர்.

இளம் நடிகர்கள் சிலரும் இதுபோன்ற பார்ட்டிகளுக்கென்றே பொள்ளாச்சி பகுதியில் பெரிய பண்ணை வீடுகளை வாங்கி வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு நடிகைகள் சங்கவி, அங்காடித் தெரு அஞ்சலி, களவாணி ஓவியா உள்ளிட்டோர் கோவையில் முகாமிட்டு, பணக்கார ரசிகர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இவர்களுடன் 10க்கும் மேற்பட்ட நடிகைகள் பங்கேற்றனர். சங்கவி பங்கேற்ற பார்ட்டிக்கு சல்சா சங்கவி என்றே பெயர் சூட்டியிருந்தனர்.

சென்னையில்...

சென்னையில் இந்த முறை நடிகர் நடிகைகளே தனித் தனி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விஜய் கொட்டிவாக்கத்தில் தந்த புத்தாண்டு பார்ட்டிக்கு நிறைய விவிஐபிக்கள் ஆஜர். அதேபோல, ரம்யாகிருஷ்ணன் தனது கிழக்கு கடற்கரைச் சாலை புதிய வீட்டில் கொடுத்த மிகப்பெரிய விருந்தில் த்ரிஷா, ஜெகபதிபாபு, சோனியா அகர்வால் என பலரும் கவர்ச்சியான உடையில் குவிந்தனர்.

மணிரத்னம் - சுஹாசினியும் புத்தாண்டு பார்ட்டி கொடுத்தனர். இங்கு மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் ஆஜராகியிருந்தார். அதேபோல ப்ரியதர்ஷன் - லிஸி கொடுத்த விருந்திலும் விஐபிக்களுக்குக் குறைவில்லை.

அஜீத் கொடுத்த 'மங்காத்தா விருந்து' அவரது வால்மீகி நகர் வீட்டில் அமர்க்களப்பட்டது. வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜெய் என அவர்களின் டீமே அங்கு புத்தாண்டை தங்கள் பாணியில் கொண்டாடியது.

மாமல்லபுரம் பண்ணை வீட்டில் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்தனர் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X