முஜிபுர் ரஹ்மான் வேடத்தில் அமிதாப்

இப்படத்திற்கு தி போயட் ஆப் பொலிட்டிக்ஸ் என ஷியாம் பெனகல் பெயரிட்டுள்ளார். முஜிபுர் ரஹ்மானுக்கு 70களில் டைம் இதழ் கொடுத்த பாராட்டுப் பெயர்தான் தி போயட் ஆப் பொலிட்டிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது. இளம் வயது முஜிபுர் ரஹ்மான் வேடத்தில், அமிதாப்பின் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளார். இவர்கள் தவிர அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராய், ஷபானா ஆஸ்மி ஆகியோரும் படத்தில் உள்ளனராம்.
இப்படத்தைத் தயாரிக்கவிருப்பவர் வங்கதேச பத்திரிக்கையாளர் அப்துல் கபார் செளத்ரி. இப்படம் குறித்து செளத்ரி கூறுகையில், என்னால் முஜிபுர் ரஹ்மான் வேடத்திற்கு, அமிதாப் பச்சனை தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த பெருமைக்குரிய வேடத்தில் நடிக்க அமிதாப் சம்மதம் கொடுத்து விட்டார். இப்போது நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன் என்றார்.
படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டாலும், இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து திரையிடப்படுமாம்.


Click it and Unblock the Notifications











