ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது!

கடந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும், இந்த ஆண்டு 2 கிராமி விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்று இந்திய இசைக்கு மகுடம் சூட்டினார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது போட்டிக்கும் கப்பிள்ஸ் ரிட்ரீட் என்ற படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நா நா... என்ற பாடல் அனுப்பப்பட்டது.
இது ரஹ்மான் எழுதிய முதல் தமிழ் பாடல். அவர் மகன் அமீன் பாடியிருந்தார். இந்தப் பாடல் நிச்சயம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஹ்மானே இதுபற்றி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த விழாவில், ஆஸ்கார் விருது போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்களை நடிகை ஆனி ஹதாவே அறிவித்தார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல் போட்டிக்கான தேர்வில் வெற்றி பெற வில்லை.
இதனால் இந்த ஆண்டும் ரஹ்மான் ஆஸ்கர் வெல்வார் என்ற கனவு கலைந்துபோனது. தமிழ் ரசிகர்களுக்கு இதில் சர்று ஏமாற்றம்தான்.


Click it and Unblock the Notifications











