கர்நாடக கலவரம்-ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பு: அர்ஜூன்

கர்நாடக வன்முறையைக் கண்டித்து நாளை தமிழ்த் திரையுலகமே திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள்.
அதேபோல கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களான அர்ஜூன், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
கர்நாடகக் கலவரம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், கர்நாடகத்தில் யாரோ சிலர் செய்து வரும் கலவரத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











