மகாதீராவை தமிழ்ப்படுத்தும் கே.பாக்யராஜ்!

இதோ அந்தப் படம் குறித்த இன்னுமொரு சிறப்புச் செய்தி. இந்தப் படத்தை அதன் அழகும் இயல்பும் த்ரில்லும் கெடாமல் தமிழாக்கம் செய்யும் பொறுப்பை ஏற்றிருப்பவர் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்!
கலைப்புலி தாணு மிகவும் கேட்டுக் கொண்டதால் இந்த வேலையை ஒப்புக் கொண்டாராம் பாக்யராஜ். எந்தக் காட்சியிலும் இது ஒரு மொழிமாற்றுப் படம் என்பது தெரியக் கூடாது என்ற கவனத்துடன் வசனம் எழுதிவரும் பாக்யராஜ், நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் விவேக்கை வைத்து புதிதாக எடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளார். அதற்கேற்ப காட்சிகள் சிலவற்றையும் சரியான வரிசையில் வைத்துள்ளாராம்.
சில காட்சிகளில் ஹீரோ ஹீரோயின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை அமைப்பது சற்று சவாலாகவே இருந்ததாம் பாக்யராஜுக்கு.
ஆனால் அதையெல்லாம் மிகக் கவனத்துடன் கையாண்டுள்ளாராம். ஏதோ புதுமுக ஹீரோ நடித்த ஒரிஜினல் தமிழ்ப்படம் இது என்றுதான் சொல்வார்கள் என்கிறார்கள் டப்பிங்கில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள்.
இந்தப் பணிக்காக பாக்யராஜுக்கு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











