தியேட்டரில் 'டிக் டிக்': பிரியா -பிருத்வி பீதி!

திண்டுக்கல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ், பிரியா மணி உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று அவர்கள் படக்குழுவினருடன் ஆர்த்தி தியேட்டரில் ஓடிய குசேலன் படத்தைப் பார்க்க செகன்ட் ஷோ சினிமாவுக்குச் சென்றனர்.
படக்குழுவினர் வந்ததை தியேட்டர்காரர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். தெரிந்தால் கூட்டம் கூடி விடுமென்று பயந்து. இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரத்தில் டிக் டிக் என பிரியா மணி இருந்த பகுதியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து தியேட்டரில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி கிளம்பியது.
இதையடுத்து பிரியா மணி உள்ளிட்டோரை பாதுகாப்பாக முதலில் தியேட்டர் நிர்வாகம் அனுப்பி வைத்து விட்டது. பின்னர் ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.
போலீஸார் விரைந்து வந்து தியேட்டரில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு டைம் பீஸ் கடிகாரம் சீட்டுக்கு கீழே இருந்ததை கண்டுபிடித்தனர். அதை யாரோ மறதியாக விட்டுச் சென்றுள்ளனர். அதுதான் டிக் டிக் சத்தத்திற்குக் காரணம்.
இதே தியேட்டரில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான ஷக்தியும் படம் பார்த்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.


Click it and Unblock the Notifications











