Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சின்னத் திரை நடிகர்களுக்கு விருது... தனி குழு!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சின்னத்திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் திட்டம் 2006ல் இந்த அரசு அமைந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கனவே 2006-ம் ஆண்டிற்கான சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு சின்னத் திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர் விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட ஓய்வு பெற்ற நீதிபதி மு.மருதமுத்து தலைமையில் இயக்குனர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி. சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜசேகர் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.