twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிப்பு ஈஸி; தயாரிப்பு கஷ்டம் கௌதம் மேனன்

    By Staff
    |

    Gowtham Menon
    யார் வேண்டுமானாலும் நடிகராகி விடலாம், ஸ்கிரிப்ட் இருந்தால் இயக்குநராகி விடலாம். ஆனால் தயாரிப்பாராவதுதான் மகா கஷ்டம் என்றார் இயக்குநர் கௌதம் மேனன்.

    இமேஜின் கிரியேஷன்ஸ் சார்பில் ஆனந்த் சக்ரவர்த்தி தயாரிக்கும் படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். முதல் சிடியை கடம் வித்வான் விநாயக் ராம் வெளியிட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

    ஒட்டன்சத்திரத்தில் இன்றும் இயங்கிவரும் வெண்ணிலா கபடி குழுவின் உண்மை சம்பவமே இப்படத்தின் கதை. படத்தின் இயக்குநர் சுசீந்திரனின் தந்தை கபடி அணியின் முன்னாள் கேப்டன். எனவே அவரும் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஒரு பாடலை வெளியிட்டார்.

    விழாவில் இயக்குனர் கௌதம் மேனன் பேசும்போது, சுப்பிரமணியபுரம் படத்துக்குப் பிறகு, மிகவும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் தந்துள்ள படம் வெண்ணிலா கபடி குழுதான். இயக்குநர் - நடிகர் நடிகைகள் குழு எல்லாமே வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழில் ஒரு லகான் எனும் விதத்தில் இந்தப் படம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்.

    சினிமாவில் நடிகராவது ரொம்ப ஈஸி. திறமை, இருந்தால் போதும். அதுபோல் ஸ்கிரிப்டும், திறமையும் இருந்தால் இயக்குனராகி விடலாம். ஆனால் தயாரிப்பாளர் ஆவதுதான் கடினம். பணம் இருந்தாலும், படம் தயாரிக்கும் எண்ணம் வர வேண்டுமே என்றார்.

    நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர் எழில், ஒளிப்பதிவாளர்கள் அல்போன்ஸ்ராய், லக்ஷ்மன்குமார், படத்தின் ஹீரோ விஷ்ணு, ஹீரோயின் சரண்யா கடம் வித்வான் விநாயக் ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விநாயக் ராமின் மகன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X