விஜய்காந்தின் பிரச்சார படமா 'மரியாதை'?

By Staff

Vijaykanth and Meera Jasmine
விஜய்காந்தின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவும் வகையில் மரியாதை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. எனவே இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க தேர்தல் கமிஷனுக்கு செல்லவும் அரசியல்ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரட்டை வேடங்களில் விஜய்காந்த் நடித்துள்ள மரியாதை திரைப்படம் வரும் 10 ம் தேதி வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக அம்பிகா, மீனா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். தொடர் தோல்வி காரணமாக ஒதுங்கியிருந்த விக்ரமன், இந்தப் படத்தை மீண்டும் இயக்கியுள்ளார்.

குடும்பப் படம் என்று கூறப்பட்டாலும், படத்தில் பல இடங்களில் அரசியல் பஞ்ச்கள் நிறைய இருப்பதாகவும், சரியாக தேர்தல் நேரமாகப் பார்த்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்வது தேமுதிக பிரச்சாரத்துக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் மீடியாவை குறுக்கு வழியில் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதால், இதை ஒரு பிரச்சினையாக எழுப்ப சிலர் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

மறைமுகமாக தேர்தல் வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை அடித்து மாநிலம் முழுக்க ஒட்டவும் முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் படம் வெளியாகும் போது சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, படத்தின் இயக்குநர் விக்ரமன் சில பத்திரிகையாளர்களை அவசர அவசரமாகச் சந்தித்து, தயவு செய்து இந்தப் படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என செய்தி போடுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, "தேர்தல் கமிஷன் உத்தரவுகள், விதிமுறைகளை எப்போதும் மதிப்பவன் நான். இப்படத்துக்காக ஏற்கெனவே போஸ்டர்கள் அச்சிடப்பட்டுவிட்டன. ஆனால் அதில் அரசியல் வசனங்கள் இல்லை. விஜய்காந்த் கட்சி சின்னம் கூட இடம்பெறவில்லை (ஆனால் படத்தில் உண்டு!).

இது ஒரு குடும்பப் பாங்கான படம். தணிக்கைக் குழுவினர் கூட எந்தக் கட்டும் கொடுக்காமல் அனுமதித்துள்ளனர். எனவே படம் நல்ல முறையில் வெளியாக எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்கள், என கேட்டு வருகிறார்.

ஆனால் எதிர் தரப்பினர் இந்தப் படம் குறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.

கஜேந்திரா படம் தொடங்கி தொடர்ச்சியாக விஜய்காந்தின் படங்கள் சிக்கலுக்குள்ளாவது தொடர்கிறது. மரியாதைக்கு முன் வெளியாக வேண்டிய எங்கள் ஆசான் படமும் நீதிமன்ற வழக்கில் சிக்கி தவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X