தலக்கோணம் காட்டில் 'ஜெகன்மோகினி'!

பல வருடங்களுக்கு முன்பு ஜெயமாலினியின் ஜெகஜால நடிப்பில் உருவாகி ஹிட் ஆன படம் ஜெகன்மோகினி. இப்படத்தை இப்போது நமீதாவை வைத்து ரீமேக் செய்கிறார்கள். ஜெயமாலினி நடித்த வேடத்தில் நமீதா நடிக்கிறார். நிலாவும் படத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், ஜெகன்மோகினி படத்தின் ஷூட்டிங் தற்போது தலக்கோணம் காட்டுப் பகுதியில் நடந்து வருகிறது. காட்டுக்குள்ளேயே தங்கி படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். காட்டில் தங்குவதற்கு நமீதா சற்றும் பயப்படவில்லையாம்.
இதையடுத்து விசாகப்பட்டனத்தில் சில காட்சிகளை படமாக்குகிறார்கள். அடுத்து அந்தமானுக்குப் பறக்கிறார்கள்.
நமீதா வந்த தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்கள் திரண்டு விட்டார்களாம். இருப்பினும் படப்பிடிப்புக்கு எந்த இடையூறும் செய்யாமல் பார்த்து ரசித்து ஒத்துழைத்தார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications