இளையராஜாவின் அழகர் மலை ஆடியோ- வெளியிட்டார் கமல்

ஆர்கே, பானு நடிக்க, எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அழகர் மலை', நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமியமும் இசையும் மணக்க மணக்க வரும் படமாகும்.
இந்தப் படத்தின் இசையை இசைஞானி இளையராஜா அமைத்துள்ளார். அத்துடன் ஒரு பாடலுக்கு அவர் இசைஞானியாகவே தோன்றுகிறார்.
கமல்ஹாசனின் ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.
படத்தின் நாயகன் ஆர்கே, இயக்குநர் எஸ்பி ராஜ்குமார், தயாரிப்பாளர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக இயக்குநர் எஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆர்கே இருவரும் கமல்ஹாசனிடம் வாழ்த்துப் பெற்றனர்.
More from Filmibeat
audio azhagar malai அழகர் மலை ஆடியோ இளையராஜா கமல்ஹாசன் சினிமா தமிழ் வெளியீடு cinema ilayaraja kamal hassan release


Click it and Unblock the Notifications











