கமாலினி, சஞ்சனா 'இடம் வலம்'!

By Staff

Kamalini with Srikanth
கமாலினி முகர்ஜியும், சஞ்சனாவும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோக்களாக ஸ்ரீகாந்த்தும், பிருத்விராஜும் மீண்டும் கை கோர்க்கின்றனர்.

கனா கண்டேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் பிருத்விராஜ். அப்படத்தில் அவரது வித்தியாசமான வில்லத்தனம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. கோபிகா அப்படத்தின் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்குப் பின்னர் தொடர்ந்து நிறைய வில்லன் வாய்ப்புகள் வந்தும் கூட அவற்றை பிருத்விராஜ் ஏற்கவில்லை. இதனால் இப்போது தமிழிலும் ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ஸ்ரீகாந்த்தும், பிருத்விராஜும் மீண்டும் இணையவுள்ளனர் - இடம் வலம் மூலம். இதில் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் இருவருமே எதிரும்புதிருமான போக்கு கொண்டவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்தான் இடம் வலம் படத்தின் கதையாகும்.

இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் வேட்டையாடு விளையாடு புகழ் கமாலினி முகர்ஜி. இன்னொருவர் சஞ்சனா.

வேட்டையாடு விளையாடு படத்திற்குப் பிறகு பல பட வாய்ப்புகள் கமாலினியைத் தேடி வந்தும் கூட அவரது சொதப்பலால் ஒரு படமும் அவருக்கு வாய்க்கவில்லை. இந்த நிலையில்தான் இடம் வலம் வாய்ப்பு வந்துள்ளது.

இப்படத்தை தமிழிலிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவுள்ளனர். மன்மோகன் இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X