புனித தோமையார் படத்தில் அஜீ்த்?

By Staff

Ajith
புனித தோமையார் குறித்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இதில் அஜீத்-ஷாலினி தம்பதி கௌரவ வேடத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் புனித தோமையார் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கான தொடக்க விழா சாந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

புனித தோமையார் திரைப்படம் குறித்து இந்த படத்தின் ஒருங்கிணைப்பாளர் பாதர் பால்ராஜ் லூர்துசாமி கூறுகையில்,

இந்த படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா, கனடா நடிகர்களிடம் பேசி வருகிறோம். எங்களுக்கு தெய்வீகமான முகம் தேவைப்படுகிறது. நட்சத்திர நடிகர்கள் தேவையில்லை.

ஒரு சமயம் நடிகை ஷாலினி தன் கணவர் அஜீத்துடன் தேவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது நான் ஷாலினியிடம் நீங்களும், உங்கள் கணவரும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். அதற்கு நடிகர் அஜீத், படம் ஆரம்பிக்கும் போது சொல்லுங்கள் என்றார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல மொழிகளில் படம் தயாரிக்கப்படும். கேரளா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X