தமிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன்!

தமிழில் தளபதி, அழகன், கிளிப்பேச்சு கேட்கவா போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் மம்முட்டி.
தற்போது தனது மகன் துல்கர் சல்மானை தமிழ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகபடுத்த முடிவு செய்துள்ளார். லிங்குசாமி இயக்கும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
மம்முட்டியும் லிங்குசாமியும் ஏற்கனவே ஆனந்தம் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்தப் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தன் மகனுக்கும் அந்தமாதிரி ஒரு வெற்றி தேவை என்ற எதிர்ப்பார்ப்பில் லிங்குசாமியிடம் அவரை ஒப்படைத்துள்ளார் மம்முட்டி. மலையாளப் படங்களின் வர்த்தக எல்லை மிகச் சிறியது என்பதாலும் தமிழில் மகனை அறிமுகப்படுத்துகிறாராம்.
இது பற்றி லிங்குசாமி கூறும்போது, "மம்முட்டி எனது சகோதாரர் மாதிரி. எனது முதல் படமான ஆனந்தம் படத்தில் மம்முட்டி நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட். எனவே அவர் தனது மகன் துல்கர் சல்மானை அறிமுகபடுத்தும்படி கேட்டதும் உடனே சம்மதித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











