மெகா டிவியின் 'டாக் ஷோ'!

சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். விரைவில் ரசிகர்களைக் கவர இந்த டாக் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது. முற்றிலும் வெளிப்புறங்களிலேயே இதன் படப்பிடிப்பு நடக்கவுள்ளது என்பது இதன் விசேஷம்.
இசை, திரைப்படம், அரசியல், கலை, டிவி, வர்த்தகம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரை சந்திப்போமா டாக் ஷோவை கண்டு களிக்கலாம்.
இந்த வாரம் (6.4.2008) பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சந்திப்போமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மலரும் நினைவுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











