3 ஹீரோயின்கள்..5 ஹீரோக்கள்..

நிஷாத் இயக்குகிறார். பசுபதியுடன் சேர்த்து சுரேஷ் கோபி, முகேஷ், ஜெயசூர்யா, கலாபவன் மணி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவிலிருந்து மலையாளத்துக்குப் போகும் ஹீரோக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. முன்பு கமல் ஹாசன் நிறைய மலையாளப் படங்களில் நடித்தார். பிறகு விக்ரம் அந்த இடத்திற்கு வந்தார்.
சரத்குமார் தற்போது ஒரு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜும் கூட நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த வரிசையில் பசுபதியும் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் தனி ஹீரோவாக பல படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் 2ம் ஹீரோ, கும்பலோடு கும்பலாக என்ற ரீதியில்தான் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோக்கள் ஐந்து பேர் என்றால் ஹீரோயின்கள் மூன்று பேர். பாமா, சம்விருத்தா, மீரா வாசுதேவன் ஆகியோரே அவர்கள்.
இவர்கள் தவிர திலகன், ஜெகதி, சாய்குமார், ரேகா, கே.பி.ஏ.சி. லலிதா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
ஒரு காலத்தில் பின்னணிப் பாடகராக இருந்த ஜெயச்சந்திரன்தான் இப்படத்தின் இசையமைப்பாளர்.


Click it and Unblock the Notifications











