தரமான படமே ஆஸ்கர் வெல்லும்-ஜே.எஸ்.நந்தினி

By Staff

J S Nadini
அமெரிக்கர்களுக்கு தரப்படும் ஆஸ்கர் விருது இந்தியர்களுக்கு தேவையில்லை என்று மூத்த நடிகரான கமல்ஹாஸன் கூறிவரும் நிலையில், தரமாகப் படம் எடுத்தால் ஆஸ்கர் நிச்சயம் என்று குரல் கொடுத்தார் ஒரு இளம் பெண் இயக்குநர்.

அவர் ஜே எஸ் நந்தினி. திருதிரு துறுதுறு படத்தின் இயக்குநர். இந்தப் படத்தை துவக்கி வைத்தவரே கமல்ஹாஸன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும்,​​ சென்னை எம்.ஓ.பி.​ வைஷ்ணவா மகளிர் கல்லூரியும் இணைந்து பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்திய ஊடகம் குறித்த கருத்தரங்கத்தில் பேசிய இயக்குநர் ஜே.எஸ்.​ நந்தினி,

பெரும்பாலான ரசிகர்கள் மசாலா படங்களைத்தான் விரும்புகின்றனர்.​ எனவே,​​ தரமான திரைப்படத்துக்குப் பதிலாக மசாலா படத்தை எடுக்க வேண்டியுள்ளது.

உலகத் தரத்துக்கு இணையாக எடுக்கப்படும் மேலை நாட்டுப் படங்களில் கூட வணிக ரீதியாகக் கவர்ச்சி சேர்க்கப்படுகிறது. ஆனால்,​​ தமிழ்ப் படங்களில் பல விஷயங்களை கலந்து கொடுக்க வேண்டியுள்ளது.​ கதைக்குத் தொடர்பில்லாமல் நகைச்சுவைக் காட்சிகளைத் திணிக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் உலகத் தரத்துக்கு இணையான படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் 15 சதம் பேர் மட்டுமே உள்ளனர்.

மீதமுள்ள 85 சதம் பேர் தரமான படத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.​ இதுவே,​​ தரமான படம் எடுப்பதற்குத் தடையாக இருக்கிறது.

ஆனால்,​​ தமிழ்ப் படங்களையும் உலகத் தரத்துக்கு இணையாக எடுத்தால்,​​ நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X