ராவணனுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை!

ராவணன் தமிழ்ப் படத்தின் இசை குறுந்தட்டுகள் வரும் 5-ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகின்றன. இந்தப் படத்தின் இந்தி ஆடியோ சில தினங்களுக்கு முன் மும்பையில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது.
இப்போது அதன் தமிழ் வடிவமான ராவணன் மற்றும் தெலுங்கு வடிவமான வில்லன் படங்களின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது திடீரென்று இந்தத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவுக்குப் பதில், நேரடியாக ஆடியோ சிடிக்களை கடைகளுக்கு அனுப்பி விடுவதென்றும், வரும் மே 14-ம் தேதி படத்தின் இசைக்காக ஒரு விழா நடத்துவதென்றும் மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.
அதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. ராவணன் பாடல்களை ரஹ்மானும் விக்ரமும் மேடையில் பாடி அசத்துவார்கள் என்றும் ராவணன் குழு தெரிவித்தது.


Click it and Unblock the Notifications











