என்னை மயக்கி ஆபாச படம் எடுத்தனர்-ரகுவண்ணன்

By Staff

Raguvannan with Stephy
எனக்கு போதை மருந்து கொடுத்து மயக்கி ஆபாசமான கோலத்தில் புகைப்படம் எடுத்து விட்டனர் என்று பெண் உதவி இயக்குநர் ஸ்டெபி மீது போலீஸில் தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிவண்ணனின் மகன் நடிகர் ரகுவண்ணன்.

நடிகர் ரகுவண்ணன் மீது ஸ்டெபி என்கிற பெண் உதவி இயக்குநர் சமீபத்தில் பரபரப்பு புகார் தெரிவித்தார். தன்னை ரகசியத் திருமணம் செய்து கொண்டு இப்போது வாழ மறுப்பதாகவும், மணிவண்ணன், இயக்குநர் சீமான் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஸ்டெபியை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும் ரகுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது, இருவரும் நெருங்கிப் பழகியது உள்ளிட்டவை குறித்து தெரிவித்தார் ஸ்டெபி.

இந்த நிலையில் விசாரணைக்கு வருமாறு பலமுறை போலீஸார் அழைத்தும் வராமல் இருந்து வந்த ரகுவண்ணன், நேற்று போலீஸ் முன்பு தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தார். இருப்பினும் நேரடியாக வராத ரகுவண்ணன், தனது வக்கீல்கள் மூலம் தனது வாக்குமூலத்தை
அளித்துள்ளார்.

அதில் ரகு கூறியிருப்பதாவது: ஸ்டெபியின் குடும்பத்திற்கு நல்ல பெயர் இல்லை. ஸ்டெபியின் தாயார் ஒரு குரூப் டான்ஸர். இப்போது நடன உதவி இயக்குநராக இருக்கிறார்.

எனது தந்தை சிறந்த இயக்குநர், நடிகர், அவருக்கு திரையுலகில் நல்ல பெயர் உள்ளது.

நான் ஸ்டெபியுடன் இன்டர்ெநட் மூலம் பழக்கம் ஏற்பட்டது உண்மைதான். எனது நண்பர்களோடு ஸ்டெபியுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன்.

ஆனால் விருந்தின்போது எனக்குத் தெரியாமலேயே மதுவுடன் போதைப் பொருளை கலந்து என்னோடு நெருக்கமாக பழகினார் ஸ்டெபி. நான் போதையில் இருந்ததைப் பயன்படுத்தி எனக்குத் தெரியாமேலேய புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதை திட்டமிட்டு செய்துள்ளார் ஸ்டெபி.

என்னிடம் பணம் பறிப்பதுதான் அவரது நோக்கம். நான் ஸ்டெபியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. உடல் ரீதியாகவும் அவருடன் நான் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. என் மீது வேண்டும் என்றே அவர் புகார் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் ரகுவண்ணன்.

இந்த நிலையில், ரகுவண்ணன் மீதான ஸ்டெபியின் புகார் உறுதியாக இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பை போலீஸார் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு தீர்ப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் விரும்பிப் பழகிய உடலுறவு வைத்துக் கொண்டால், அதன் பின்னர் அந்த நபர் மணக்க மறுத்தால் அது கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ரகுவண்ணனும், ஸ்டெபியும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற படங்களை மட்டுமே தனது புகாருக்கு ஆதாரமாக கொடுத்துள்ளார் ஸ்டெபி. மேலும் கற்பழிப்புப் புகாரும் தரவில்லை. ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக மட்டுமே கூறியுள்ளார். அதற்குரிய ஆதாரங்களும் அவரிடம் இல்லை. எனவே ஸ்டெபியின் புகாரை வைத்து ரகுவண்ணன் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க சட்டரீதியாக வாய்ப்பில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X