மீண்டும் 'ஐஸை' இயக்கும் மேனன்!

இப்போது மீண்டும் புதுப்படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். இதிலும் அவரது விருப்பமான ஐஸ்வர்யா ராய்தான் நாயகி. ஐஸுக்கு ஜோடி அவரது கணவர் அபிஷேக் பச்சனேதானாம்...
பழைய படங்களை ரசிகர்கள் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு உல்டா பண்ணுவதில் கில்லாடியான ராஜீவ் மேனன், இப்போது தான் இயக்கும் படத்துக்கும ஒரு பழைய இந்திப் படக் கதையைத்தான் சுட்டிருக்கிறாராம். படம் அபிமான். அமிதாப்பின் பழைய படம்.
கேட்டால், நான் அபிமானைக் காப்பியடிக்கவில்லை. அந்தப் படத்தின் பாதிப்பில், அதே சாயலில் ஒரு கதையை தயார் செய்துள்ளேன் என்கிறாராம் ராஜீவ்.
அட... காப்பியடிக்கிறதுக்கு இப்படியொரு நாகரீகமான பெயரா!
Comments


Click it and Unblock the Notifications