'9 ரோபோக்கள்'-ஷங்கரை வெறுப்பேற்றும் ஷாருக்!

By Staff

Shahrukh Khan with Priyanka Chopra
இயக்குனர் ஷங்கருக்கும் பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாரூக் கானுக்கும் இடையிலான மோதல் பெரிதாக வெடித்துள்ளது.

தான் நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்டு இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஷங்கரின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பான ரோபோவுக்கு நூதனமாக நெருக்கடி கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாரூக்.

ரோபோ எனும் பெயரில் கிட்டத்தட்ட 9 புதுப்படத் தலைப்புகளைப் பதிவு செய்து வைத்துள்ளாராம் ஷாரூக்.

சிவாஜி படம் முடிந்ததும் ரோபோ படக் கதையை இந்தியில் படமாக்கத் திட்டமிட்டார் இயக்குனர் ஷங்கர். இந்த கதையை ஷாருக்கானிடம் கூறினார். கதை மிகவும் பிடித்துப் போனதால், படத்தை தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, நடிப்பதாக ஷாரூக் கான் தெரிவித்தார்.

இதற்கிடையே கதை விவாதத்தின்போது ஏற்பட்ட பிரச்சினையால் படத்திலிருந்து ஷாரூக் விலகிக் கொண்டார். இதையடுத்து ரோபோ படத்தை ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழ்-தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குகிறார் ஷங்கர்.

இதற்கிடையே கடந்த வாரம், மும்பையிலுள்ள மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அமைப்பில் ஷாருக்கின் ரெட் சில்லிஸ் நிறுவனம், மொத்தம் 9 தலைப்புகளை பதிவு செய்துள்ளது. இந்த 9 தலைப்புகளுமே ரோபோ எனும் பெயரை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன.

ரோபோ, ரோபோ எ ஹீரோ, மேரா ரோபோ, மெய்ன் ஹூன் ரோபோ, ரோபோ மை ஹீரோ உட்பட 9 தலைப்புகளை ஷாருக் பதிவு செய்துள்ளார்.

ஷங்கர் தனது படத்துக்கு ரோபோ எனத் தலைப்பு வைத்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதால் இப்படம் இந்தியிலும் நேரடியாக வெளியாகிறது.

ஷாருக், ரோபோ தலைப்பை பதிவு செய்திருப்பதால் ஷங்கரின் இந்தி ரோபோ வேறு பெயரில் வெளியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X