சிவாஜி பேரன்-பேத்தி திருமணம்!

By Staff

Kunal with Aishwarya
நடிகர் பிரபுவின் மகளும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியுமான ஐஸ்வர்யா திருமணம், சென்னையில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. தனது அத்தை தேன்மொழியின் மகனை அவர் மணக்கிறார்.

'நடிகர் திலகம்' சிவாஜிகணேசனின் இளைய மகன் நடிகர் பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்ரம் திருமணம் நடந்தது. இப்போது, ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

மணமகன் பெயர் குணால். இவர், பிரபுவின் தங்கை தேன்மொழியின் மகன். இவர்கள் திருமணம், சிறு வயதிலேயே தாத்தா சிவாஜிகணேசன்-பாட்டி கமலாம்மாவும் முடிவு செய்யப்பட்டதாம். அவர்களின் ஆசைப்படி இந்தத் திருமணம் நடைபெறுகிறது என பிரபு தெரிவித்தார்.

மணமகள் ஐஸ்வர்யா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். மணமகன் குணால், எம்.பி.ஏ. பட்டதாரி. அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கிறார்.

வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

வரவேற்பு

முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி 7-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அப்போது காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான்கள் ராஜேஷ் வைத்யா-மோகன ராமன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், அவருடைய மனைவி கண்ணம்மா, பிரபு, அவருடைய மனைவி புனிதவதி மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X