'ஸ்லம்டாக்'கில் சிம்பு!

By Staff

Naanum Kodeeswaran
தமிழ் பேசவுள்ள ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிம்பு, ஹீரோ தேவ் படேலுக்கு குரல் கொடுக்கிறாராம்.

அகில உலகப் புகழ் பெற்று விட்ட ஸ்லம்டாக் தமிழ் பேச வருகிறது. ஆங்கிலப் படங்களுக்கான தமிழ் டப்பிங்கில் - அதோ எதிரிகள் நம்மை நெருங்கி வி்ட்டார்கள், ஓடுங்கள், ஓடுங்கள் - என்று வசனம் பேசுவோரை பயன்படுத்துவதை விட்டு விட்டு, பிரபல நட்சத்திரங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

அதன் விளைவாக தற்போது திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் சிலர் ஸ்லம்டாக் தமிழ் டப்பிங்கில் குரல் கொடுத்துள்ளனராம்.

படத்தின் நாயகன் தேவ் படேலுக்கு சிம்பு குரல் கொடுக்கிறார்.

இர்பான் கானுக்கு, ராதாரவி குரல்தானம் வழங்கியுள்ளார். குவிஸ் மாஸ்டராக வரும் அனில் கபூருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுக்கிறார்.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், ஸ்லம்டாக் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு குரல் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த வாரம் இந்தப் படத்தை முக்கா முக்கா மூனுவாட்டி பார்த்து மகிழ்ந்தேன்.

இது சிறந்த படம். நல்ல திரைக்கதை. நல்ல இசை, நல்ல விஷயங்கள் பல உள்ளன. மேலும், காதல் ஜோடிக்கு இடையே வழக்கமாக காட்டப்படுவதைப் போல இல்லாமல் சற்று வித்தியாசமான காதலை இதில் காட்டியுள்ளனர்.

கோல்டன் குளோப் விருது பெற்ற இப்படிப்பட்ட படத்தில் நானும் பங்கேற்கிறேன் என்பது பெருமையாக உள்ளது என்றார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X