twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசின் கார் டிரைவர் மிரட்டல்!-சுடலை வடிவு புகார்!!

    By Staff
    |

    Asin with Nallamuthu Kumar
    கோர்ட்டில் வழக்கு தொடுத்து, வீணாக அசினைப் பகைத்துக் கொள்ளாதே என்று அசினின் கார் டிரைவர் முருகன் தன்னை மிரட்டியதாக நல்லமுத்துக்குமாரின் தாயார் சுடலைவடிவு புகார் தெரிவித்துள்ளார்.

    நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர் நல்ல முத்துக்குமார். இவர் காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் செங்குன்றத்தில் வசிக்கும் முத்துக்குமாரின் தாய் சுடலை வடிவு சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடமும், பொன்னேரி துணைக் கண்காணிப்பாளர் ரங்கராஜனிடமும் கடந்த 19ம் தேதி புகார் கொடுத்தார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைக் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் நல்லமுத்துக்குமாரை தேடி வருகின்றனர். மும்பை சென்ற தனிப்படை போலீசார் நல்ல முத்துக்குமாரின் நண்பர்களிடமும் விசாரித்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அசினின் கார் டிரைவர் முருகன் தன்னை செல்போனில் மிரட்டியதாக நல்ல முத்துக் குமாரின் தாய் சுடலை வடிவு சோழவரம் போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.

    போலீசாரிடம் சுடலை வடிவு கொடுத்துள்ள புகார் விவரம்:

    நான் கடந்த 19ம் தேதி பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜனிடம் புகார் கொடுத்தேன். இதுவரை என் மகனைப் பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே இப்போது சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    நேற்று இரவு 9 மணிக்கு அசின் கார் டிரைவர் முருகன் என்னுடன் செல்போனில் பேசினார்.

    உன் மகன் காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் செய்தாய். இப்போது கோர்ட்டில் வழக்குப் போடப் போகிறாயா... உன் வக்கீல் யார்? உன்னால் அசினை எதிர்த்து என்ன செய்ய முடியும்? மரியாதையாக இத்துடன் நிறுத்திக் கொள்.

    உன் மகன் மும்பையில்தான் உள்ளான். கடந்த 25ம் தேதி கூட அசினின் அப்பாவிடம் செல்போனில் பேசினான். முத்துக்குமார் மும்பையில் பையா என்றழைக்கப்படும் கூட்டத்தினரிடம் சேர்ந்துவிட்டான். வீணாக நீ அசினை பகைத்துக் கொள்ளாதே என்று முருகன் மிரட்டினார் என்று சுடலை வடிவு புகார் தெரிவித்துள்ளார்.

    கடந்த 15 நாட்களாக முத்துக்குமார் அங்கிருக்கிறார், இங்கிருக்கிறார், செல்போனில் பேசினார் என்றுதான் போலீசாரும் இதுவரை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இன்னும் அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X