twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னடப் படம் இயக்கும் சுஹாசினி!

    By Staff
    |

    Suhasini
    தமிழில் இந்திரா என்ற படத்தை இயக்கிய பிறகு அமைதியாகிவிட்ட நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாஸினி இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தமுறை அவர் கன்னடப் படத்தை இயக்குகிறார்.

    அனந்த நாக்கின் கன்னடப் படத்தில் நடித்து வரும் சுஹாசினி, அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன் நாயகனாக நடிக்கிறார். அவர் கூறுகையில், "நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு கன்னடப் படம் இயக்கும் ஆர்வம் உள்ளது. விஷ்ணுவர்தன் என்னை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார். ஆனால் என் மகன் படிப்பு முடியட்டுமே என்று காத்திருந்தேன். இப்போது சுதந்திரமாகிவிட்டேன். படம் இயக்கும் நேரம் வந்துவிட்டது.

    அடுத்த ஆண்டு அந்தப் படம் ரிலீஸாகும். நிச்சயம் கன்னட ரசிகர்கள் விரும்பும் வகையில் அந்தப் படம் அமையும்" என்றார் அவர்.

    1984ம் ஆண்டிலிருந்தே சுஹாஸினி தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

    சுஹாசினி மீது ஷக்தி சிதம்பரம் தாக்கு..

    இந் நிலையில் என்னம்மா கண்ணு, சார்லின் சாப்ளின், மகா நடிகன், இங்கிலீஸ்காரன், சண்ட உள்பட பல படங்களை தயாரித்து, இயக்கியுள்ள ஷக்தி சிதம்பரம் சமீபத்தில் லாரன்ஸை ஹீரோவாக்கி, மீனாட்சி, காம்னாவை கதாநாயகிகளாக்கி இயக்கிய ராஜாதி ராஜா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

    இந்தம் படம் குறித்து ஒரு தொலைக்காட்சியில் சுஹாசினி திரை விமர்சனம் செய்திருந்தார். அதில் படத்தையும், ஷக்தி சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதனால் கடுப்பாகியுள்ள ஷக்தி சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில்,

    ராஜாதி ராஜா 3வது வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 நாட்களுக்கு முன்பு சுஹாசினி தனது திரை விமர்சனத்தில், இந்த படத்தை விமர்சனம் செய்வதையே கேவலமாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    அந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், அதையடுத்து ரஜினியும், அதையடுத்து விஜயும் செய்து வரும் கமர்சியல் பார்முலாவை லாரன்சை வைத்து ஷக்தி சிதம்பரம் கூத்தடித்திருக்கிறார் என்றும் 20 வருடங்களுக்கு முன்பு வர வேண்டிய படம் இது என்றும் கூறியிருக்கிறார்.

    20 வருடங்களுக்கு முன்புள்ள கதையைத்தான் நான் டைரக்டு செய்திருக்கிறேன். ஆனால், அவருடைய கணவர் மணிரத்னம் 2000ம் வருடங்களுக்கு முன் வந்த ராமாயண கதையைத் தானே, ராவணா' என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.

    சத்தியவான்-சாவித்ரி கதையைத்தான் ரோஜா படமாக மணிரத்னம் எடுத்தார். அந்த 7 நாட்கள் படத்தைத் தானே மெளன ராகமாக எடுத்தார். கர்ணன் படத்தைத் தானே தளபதியாக எடுத்தார். அவருடைய கணவர் பழைய கதைகளையே படமாக்கும்போது, என்னை விமர்சனம் செய்வதற்கு சுஹாசினிக்கு தகுதியில்லை.

    ஏசி ரூமில் இருந்து கொண்டு என் படத்தை கடுமையாக தாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த சினிமாவை அவர் சாடியிருக்கிறார். தமிழக மக்கள் எல்லோரையும் முட்டாள் என கூறியிருக்கிறார்.

    இது என் மனதை மிகவும் நோகடித்துவிட்டது. அவரை சும்மாவிட மாட்டேன். சுஹாசினி மீது வழக்குத் தொடர்வேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், டைரக்டர் சங்கத்திலும் சுஹாசினி மீது புகார் தருவேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X