சீனப் பட விழாவில் பசங்க!

ஏற்கெனவே மூன்று தேசிய விருதுகள், இரண்டு மாநில விருதுகள் உள்பட பல சர்வதேச விருதுகளை இந்தப் படம் வென்றது.
தற்போது சீன பட விழாவுக்கும் தேர்வாகியுள்ளது. அக்டோபர் 11-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை பெய்ஜிங்கில் இந்த பட விழா நடக்கிறது. சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து பசங்க படத்தை திரையிடுகின்றனர்.
பசங்க பட தயாரிப்பாளர் சசிகுமார், பாண்டிராஜ் இருவரையும் பட விழாவுக்கு வருமாறு விழாக்குழுவினர் அழைத்துள்ளனர். அதை ஏற்று இருவரும் சீனா செல்கிறார்கள்.
இந்தப்படம் நார்வே தமிழ்ப் பட விழாவிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











